பிரிட்டிஷ் காதலனுடன் ஒபாமாவின் மகள்: வைரல் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மாலியா தனது பிரிட்டிஷ் காதலனுடன் நியூயோர்க் நகரில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

ஒபாமாவின் மூத்த மகள் மாலியா தற்போது ஹவார்ட் பல்கலைக்கழத்தில் படித்து வருகிறார். இவர் தனது பிரிட்டிஷ் காதலனான Rory Farquharson- ஐ காம்பிரிட்ஜில் உள்ள Ivy League school- ல் வைத்து சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலர்கள் என்பது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளி உலகத்திற்கு வந்தது. Harvard-Yale football விளையாட்டு நடைபெறும் போது, மாலியா தனது காதலனை முத்தமிட்ட காட்சி அப்போது வைரலானது.

தற்போது, இவர்கள் இருவரும் நியூயோர்க் நகரில் அமர்ந்து மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், மாலியா தனது காதலனை பார்த்து சிரித்தபடி இருக்கிறார், காதலன் Rory, பாதி புகைத்திருந்த சிகரெட்டை கையில் வைத்திருந்தபடி அமர்ந்திருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்