கொதிக்கும் எண்ணெயில் மனைவியின் கையை விட்டு கொடுமை செய்த கணவன்

Report Print Harishan in அமெரிக்கா

அமெரிக்காவில் கொதிக்கும் எண்ணெயில் மனைவியின் கையை விட்டு கொடுமை படுத்திய கணவன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஜெரிமியா டி.க்ரோதர்ஸ்(வயது 34) என்னும் நபர் தனது மனைவி மற்றும் 7 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16-ஆம் திகதி கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன் ஜெரிமியா தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

சத்தம் அதிகமாக கேட்டதால் ஜெரிமியா குடும்பம் குடியிருந்த பகுதியின் அக்கம்பத்தினர் உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், கையில் தீக்காயங்களுடன் கிடந்த ஜெரிமியாவின் மனைவி மற்றும் வாயில் துனியால் மூடப்பட்டிருந்த 7 மாத குழந்தை என இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் ஜெரிமியா, சமயலறையில் சிக்கன் சமைத்துக் கொண்டிருந்த தனது மனைவியின் கையை பிடித்து எண்ணெய் சட்டியில் விட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

மேலும் தனது 7 வயது கைக்குழந்தை அழுகையை நிறுத்தாததால் அதன் வாயில் துணியை வைத்து அடைத்துள்ள அந்த கொடூரன், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்