மாரத்தானில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றவர் நபர்: போட்டி அமைப்பினர் எடுத்த முடிவு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் மாரத்தான் போட்டிகளில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்ற வீரருக்கு, அல்ட்ரா மாரத்தான் அமைப்பு மாரத்தானில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் அல்ட்ரா மாரத்தான் போட்டிகளில் பிரபலமானவர் கெல்லி அக்நியு. 45 வயதான இவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அல்ட்ரா மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு, 2015ஆம் ஆண்டிலும் இவரே வெற்றி பெற்றார். ஆனால், 48 மணி நேர அல்ட்ரா மாரத்தான் போட்டியில், 55 மைல்களுக்கு அதிகமான தூரத்தை அவர் எட்டினார்.

மேலும், ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கும், 2வது இடத்துக்கும் வந்தவர்களுக்கும் அதிக அளவு தூர வித்தியாசம் இருந்தது. இதனால் போட்டி அமைப்பாளர்களுக்கு கெல்லியின் மீது சந்தேகம் வந்தது.

இதனைத் தொடர்ந்து, கெல்லியைக் கண்காணிக்க போட்டி அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி, சமீபத்தில் நடந்த போட்டியில் கழிப்பிடங்களில் கமெராக்களைப் பொருத்தினர்.

அப்போது தான் அவர்களுக்கு உண்மை தெரிய வந்தது. கழிவறைக்குச் சென்ற கெல்லி, ஏழு நிமிடங்கள் அங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்திருக்கிறார். பின்னர், உத்வேகத்துடன் ஓடி வெற்றி இலக்கை அடைந்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த போட்டி அமைப்பாளர்கள், கெல்லியை தகுதி நீக்கம் செய்தனர். மேலும், இதுவரை அவர் வாங்கிய பட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும், விளையாடத் தடை விதிப்பதாகவும் அறிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘ஓய்வெடுக்காமல் ஓட வேண்டும் என்பதுதான் போட்டி. கழிவறையைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு, பிறகு ஓடுவதில் நியாயம் இல்லை’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்