இளம் வயது ஆபாச பட நடிகைக்கு வந்த நோய்: அரை நிர்வாணமாக இறந்து கிடந்த பரிதாபம்

Report Print Santhan in அமெரிக்கா

பிரபல ஆபாச பட நடிகையான ஆலிவா நோய்டா சிறுநீரக தொற்று நோய் காரணமாக இறந்துள்ளார்.

அமெரிக்காவின் Nevada பகுதியில் உள்ள Las Vegas-ல் பிரபல ஆபாச பட நடிகை Olivia Nova(20) வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 7-ஆம் திகதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், தகவல் அறிந்து நாங்கள் வீட்டிற்கு வருவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னர் Olivia Nova இறந்துள்ளார்.

அவருக்கு சிறுநீரக தொற்று நோய் பிரச்சனை இருந்துள்ளது, அதன் காரணமாக இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும், அவர் வீட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்தார். அதுமட்டுமின்றி அவரது கால்களில் காயங்கள் இருந்தன. தலை படுக்கைக்கு கீழே சாய்ந்து கிடந்தன, இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

20 வயதான Olivia Nova-வின் உண்மையான பெயர் Lexi Forde, இவர் தன்னுடைய வாழ்க்கையை ஒரு மொடலாக துவங்கியுள்ளார். அதன் பின் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆபாச படத்தில் நடிப்பதற்கு வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் Olivia-வை சேர்த்து 4 ஆபாச பட நடிகைகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்