அமெரிக்கா மீது சீனாவின் புதிய குற்றச்சாட்டு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்கப் போர் கப்பல் ஒன்று தங்களது பிராந்தியப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

தென் சீனக் கடலில் உள்ள ஹுவாங்யன் தீவு, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவினால் உரிமை கோரப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தீவாகும்.

இந்த பகுதியில் கடந்த மே மாதம், அமெரிக்கப் போர் கப்பல் ஒன்று நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்க போர் கப்பல் அந்த பகுதியில் நுழைந்திருப்பதாகக் கூறி, சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், ‘கடந்த ஜனவரி 17ஆம் திகதி அமெரிக்க போர் கப்பல் ஒன்று, எங்கள் பிராந்தியத்திற்கு உட்பட்ட ஹுவாங்யன் பகுதியில் அனுமதி இன்றி நுழைந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல், சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும் வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளால் ஏற்பட்ட கொரிய தீபகற்ப பதற்றத்தை தணிக்கும் முயற்சியில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்