13 பிள்ளைகளை சித்திரவதை செய்த தம்பதியைப் பற்றிய சமீபத்திய தகவல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு 13 பிள்ளைகளை சித்திரவதை செய்த Louise Turpin, 16 வயதில் தனது காதலனுடன் வீட்டைவிட்டு ஓடி வந்தது தெரியவந்துள்ளது.

David Turpin தனது காதலியிடம், தன்னுடன் வந்து விட்டால் அவள் உலகத்தில் எதைக்கேட்டாலும் தருவதாக வாக்களித்துள்ளான்.

நாட்டை விட்டு 1000 மைல்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டு நாட்டுக்குக் திரும்பக்கொண்டு வரப்பட்டனர், எனினும் அவரை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

Louiseஇன் கணவனுக்குப் பல வீடுகளும் கார்களும் இருந்ததால் அவள் ஒரு பணக்காரியாக வாழ்ந்திருப்பாள் என்றுதான் தாங்கள் நினைத்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகுதான், எவ்வளவு மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாகவும் அவளது சகோதரியான Teresa தெரிவிக்கிறார்.

மேலும் கூறுகையில், “எனக்கு ஐந்து சகோதரிகள் இருந்தார்கள், இப்போது ஒருத்தி செத்துவிட்டாள். இனி எனக்கு நான்கு சகோதரிகள்தான்” என்று கூறிய Teresa, “இதுவரை அவள் பிள்ளைகளை சித்திரவதை செய்தாள். இனி வாழ்க்கை முழுவதும் அவளை சித்திரவதை செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று வெறுப்புடன் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்