மீன் உணவினை சாப்பிட்டதால் நபரின் உடலில் இருந்து வெளியான 5 அடி நீளம் கொண்ட நாடாப்புழு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அன்றாடம் sushi என்ற உணவினை சாப்பிட்ட காரணத்தால் அவரது வயிற்றில் இருந்து 5 அடி நீளம் கொண்ட நாடாப்புழு வெளிவந்துள்ளது.

Sushi என்பது ஜப்பானை சேர்ந்த உணவு ஆகும். இது கடல் உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த நபர், இந்த உணவினை அன்றாடம் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால், சமீபத்தில் இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வயிற்றுபோக்கு ஏற்பட்ட காரணத்தால், மருத்துவரை சந்தித்துள்ளார்.

இவரை பரிசோதித்த மருத்துவர், கடல்வாழ் உயிரினத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவினை அன்றாடம் சாப்பிட்டு வந்த காரணத்தால், இவரது உடலில் புழுக்கள் வளர்ந்துள்ளது.

தற்போது, 5 அடி நீளம் கொண்ட நாடாப்புழு வெளிவந்துள்ளது. எஞ்சியுள்ள நாடாப்புழுக்கள் அவரது உடலில் இருந்து அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்