முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Report Print Gokulan Gokulan in அமெரிக்கா

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி ஒபாமா தனது பதவி காலத்தில் ஒவ்வொறு நிமிடத்தையும் உலகம் சார்ந்த மிகப்பெரிய திட்டமிடலுக்கும் அதை செயல்படுத்தவும் முனைப்புகாட்டி பரபரப்புடன் இருந்தார்.

ஆனால் பதவிக்கு பின் தினம் தோறும் எப்படி நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிப்பது என திட்டமிட்டு வருகிறார்.

ஓய்வுக்கு பின்னர் தொழிலதிபரான ரிசர்ட் ப்ரான்சனுடன் கடற்கரையில் பட்டம் விட்டு நேரம் செலவிட்டும் வெளிநாட்டு உயர் அதிகாரிகள் சிலருடன் சந்திப்பு நடத்தினார்.

எக்காரணம் கொண்டும் ஓபாமாவை கார் ஓட்ட அவருடன் இன்றும் இருக்கும் சில பதுகாப்பு அதிகாரிகள் பதுகாப்பு காரணமாக அனுமதிப்பது இல்லை.

பெரும்பாலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் தொழில் ரீதியாக செயல்பட முனைவதில்லை. வெள்ளை மளிகை மற்றும் ஜனாதிபதி பதவியின் கவுரவம் காக்க இவ்வாறு செய்யபடுவதாக கூறப்படுவதுண்டு. ஆனால் ஒபாமா வேறு திட்டம் வைத்திருப்பதாக தெரிகிறது.

ஒபாமா தனது இரண்டாவது மகள் பள்ளியை நிறைவு செய்யும் வரை தனது ஒபாமா அறக்கட்டளையை கவனிதுக்கொண்டே வாசிங்டனில் வசிக்க முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆகும் முன் ஒபாமா வழக்கறிஞர் தொழில்புரிந்தவர் ஆவர். எனவே அவர் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பதவியில் இருக்கும் போதே ஒபாமா கருத்து தெரிவித்திறுந்தது குறிப்பிடதக்கது.

2008 தேர்தலில் அவருடைய வெற்றி சமூக ஊடகங்களால் சாத்தியமானது என ஒப்புக் கொண்ட போதிலும், அது தொடர்பாக அவர் கடுமையான வார்த்தைகள் சிலவற்றை பயன்படுத்தி பேசினார்.

சமூக வலைதளங்கள் ஒரு "குமிழி" போல் ஆகிவிட்டன, அங்கு மக்கள் நம்பிய விரும்பிய கருத்துகள் மட்டுமே பார்க்கவும் பகிரவும் செய்யப்படுகிறது.

ஆனால் கருத்தின் உண்மைதன்மை மற்றும் இன்றியமையாத சில முக்கிய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கபடுவதில்லை என்றார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்