டிரம்பின் உடல்நிலை மற்றும் அறிவாற்றல் எப்படியுள்ளது? மருத்துவர் பேட்டி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் டிரம்பிற்கு முதல் முறையாக கடந்த வாரம் மூன்று மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் வந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மருத்துவர் ஜான்சன், ஒட்டுமொத்தமாக டிரம்பின் உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார்

பதவிகாலம் முழுவதும் இதே ஆரோக்கியத்துடன் இருப்பார் என கூறியுள்ளார். கடந்த வாரம் ராணுவ மருத்துவர்கள் டிரம்ப்பை பரிசோதித்த நிலையில் அவர்களும் டிரம்ப் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவே கூறினார்கள்.

சமீபத்தில் டிரம்ப் குறித்து வெளியான ஃபயர் அண்ர் ஃப்யூரி புத்தகத்தில், அவரை வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் ஒரு குழந்தையைப் போல் பார்க்கிறார்கள் என ஆசிரியர் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து டிரம்பின் மனநிலை குறித்து சர்ச்சையை உண்டான நிலையிலேயே இந்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்