மகனின் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை: நடந்த சம்பவம்

Report Print Kabilan in அமெரிக்கா
2413Shares
2413Shares
ibctamil.com

அமெரிக்காவில், 17 வயது சிறுவன் ஒருவன் தனது கைப்பேசியில், இரண்டு வயது பெண் குழந்தையை நிர்வாணமாக படமெடுத்துள்ளான். இதனை அறிந்த சிறுவனின் தந்தை உடனடியாக பொலிஸில் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கவுண்டி நகரைச் சேர்ந்தவர் பால் ஸ்பென்ஸ்பெர்கர். இவருக்கு 17 வயதில் ஆண்ட்ரூ என்ற மகன் உள்ளான்.

கடந்த டிசம்பர் 30ஆம் திகதி, பால் தனது மகனின் கைப்பேசியில், இரண்டு புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த புகைப்படங்களில், ஆண்ட்ரூ தனது உறவினரான தோழியுடன் இருக்கிறார். அதனுடன் இரண்டு வயது பெண் குழந்தை நிர்வாண நிலையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளது.

இது குறித்து அவர் ஆண்ட்ரூவிடம் கேட்டபோது, தனது பள்ளியின் வகுப்புத் தோழனுக்கு, இந்த புகைப்படங்களை 350 டொலருக்கு விற்று,

அதன் மூலம் சிலரிடம் வாங்கிய கடனை அடைக்க இருந்ததாக சிறுவன் கூறியுள்ளான். அதன் பின்னர், தனது மகனின் இந்த நடவடிக்கைக்கு தண்டனை அளித்துள்ளார் பால்.

இதனைத் தொடர்ந்து, பால் தன் மகன் மீதே பொலிஸிலும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் குழந்தை பாலியல் குற்றத்தின் கீழ், சிறுவனை கைது செய்தனர்.

அதன் பின்னர், சிறுவனுக்கு சிறை தண்டனையுடன், 10,000 டொலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. எனினும், பால் கட்டிட தொழில் செய்து வந்தாலும் அந்த அபராதத்தை அவர் செலுத்த மறுத்து விட்டார்.

இது குறித்து பால் கூறுகையில், ‘எனது மகனின் இந்த செயலால் நான் வெறுப்படைந்தேன். அவன் ஒரு திருடன் தான், ஆனால், பாலியல் ரீதியாக அல்ல. தனது பணத்தேவைக்காகவே அவன் இந்த காரீயத்தைச் செய்துள்ளான்.

அவன் சிறையில் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தனது தவறை அவன் உணர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

பால், இந்த வழக்கிற்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்க இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும், இது குறித்து அவர் சிலருடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்