பள்ளியில் நேர்ந்த அவலம்: திருநங்கை மாணவிக்கு £590,000 வழங்க உத்தரவு

Report Print Raju Raju in அமெரிக்கா
101Shares
101Shares
ibctamil.com

அமெரிக்காவில் திருநங்கை மாணவி ஒருவர் பள்ளியில் ஆண் கழிப்பறையை உபயோகிக்க அனுமதிக்கப்படாத நிலையில் பள்ளிக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கில் £590,000 பணத்தை மாணவிக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் விஸ்கோன்சின் மாகாணத்தில் உள்ள டிரம்பர் உயர்நிலை பள்ளியில் படித்து கடந்தாண்டு தேர்ச்சி பெற்றவர் ஆஷ் விடாகெர். இவர் திருநங்கை ஆவார்.

விடாகெர் ஆண்கள் கழிப்பறையை பள்ளிக்கூடத்தில் உபயோகிக்க அனுமதி கேட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதையும் மீறி விடாகெர் ஆண்கள் கழிப்பறையை சில சமயம் உபயோகப்படுத்திய நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், ஆண்கள் கழிப்பறைக்கு அவர் செல்கிறாரா என தனியாக கண்காணிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விடாகெர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் செயலை கண்டித்த நீதிமன்றம் மாணவி விடாகெருக்கு £590,000 பணம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதோடு இனி அந்த மாணவி குறித்த பள்ளிக்கு எப்போது சென்றாலும் ஆண்கள் கழிப்பறையை உபயோகிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இது குறித்து விடாகெர் கூறுகையில், தீர்ப்பு சாதகமாக வந்தது எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

இனி என் எதிர்காலத்தை நான் கவனித்து கொண்டு கல்லூரிக்கு செல்வேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்