இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க ஜனதிபதியாக வாய்ப்பு: வெளியான தகவல்கள்

Report Print Santhan in அமெரிக்கா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அவரும் ஜனாதிபதியாக விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலிக்கு(45) அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

டிரம்பின் ஆட்சியில் தான் நிக்கி ஹேலி ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி எந்தவொரு அமெரிக்க ஜனாதியாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கேபினட் அந்தஸ்தில் பொறுப்புகளை கொடுத்ததில்லை.

இதைத் தொடர்ந்து நிக்கி ஹேலிக்கு தேசிய அரசியலில் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மைக்கேல் ஊல்ப்ஸ் எழுதிய பயர் அண்டு பியூரி என்ற புத்தகத்தில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஹேலி போட்டியிடுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அவரும் அதை விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஸ்டீவ் பேனன் இதை விரும்பவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers