அமெரிக்காவில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில உள்ளது.

இங்கு உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது, மளமளவென தீ மேல் மாடிகளுக்கும் பரவியது.

தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 1 வயது குழந்தை உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர், பலத்த காயமடைந்த நால்வர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கால் நூற்றாண்டுகளில் இது மோசமான தீ விபத்து என நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்