அமெரிக்க மக்கள் மனதில் இடம்பிடித்த முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனமான CNN அமெரிக்க மக்கள் மனதில் முதலிடம் பிடித்துள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து, தொலைபேசி வாயிலாக கருத்து கணிப்பை நடத்தியது.
இந்த கருத்துக் கணிப்பில் 17 சதவித வாக்குகள் பெற்று, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பராக் ஒபாமா, அமெரிக்க மக்களின் மனதில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தை 14 சதவித வாக்குகள் பெற்ற தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், மூன்றாவது இடத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸும் பிடித்துள்ளனர்.
இதேபோல பெண் பிரமுகர்களின் பட்டியலில், ஹிலாரி கிளிண்டன் முதலிடமும், மிச்செல் ஒபாமா 2ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
கடந்த 71 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த வாக்கெடுப்பில், இதுவரை பதவியில் இருந்த ஜனாதிபதிகளே முதலிடம் பிடித்திருந்தனர்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பதவி ஏற்று ஒரு ஆண்டு ஆகியும் அவர் முதலிடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.