பனிக்கட்டியில் சிக்கிக் கொண்டு போராடிய சிறுவனை மீட்டது எப்படி?

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் கடுமையான பனிக்கட்டிக்குள் சிக்கிக் கொண்டு போராடிய சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து பொலிஸ் அதிகாரி பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள நியூ ஹார்மனி என்ற இடத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

நாய் துரத்திய போது பயந்து ஓடிய சிறுவன் அங்கிருந்த குளத்தில் விழுந்துள்ளான், சிறுவன் கையை உயர்த்தி பிடித்தபடி கதறியதை பார்த்த பெண், பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த அதிகாரி சார்ஜென்ட் ஏய்ரன் தாம்சன் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்.

பனிக்கட்டிகள் தடிமனாக இருந்ததால் மேலும், கீழுமாக உடைத்து சிறுவனை மீட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குளத்தின் விளிம்பில் இருந்து 25 அடி பரப்பளவுக்கு கீழே அச்சிறுவன் மிதந்து கொண்டிருந்ததாகவும், சுமார் அரைமணிநேரம் மிதந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் ஷெரிப் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்