கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீட்டிற்கு ஒரு மாத மின் கட்டணம் 18 லட்சம் கோடி? அதிர்ச்சியில் உறைந்த பெண்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஒருவர் வீட்டிற்கு 18 லட்சம் கோடி மின் கட்டணம் வந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மேரி ஹோரோமான்ஸ்கி என்ற பெண்ணின் வீட்டிற்கு மட்டும் 18 லட்சம் கோடி அதாவது அமெரிக்க டொலர் $284 பில்லியன் மின்சார கட்டணம் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக புகைப்படம் எடுத்து கல்லூரில் படிக்கும் தன் மகனுக்கு அனுப்பி இருக்கிறார். அவர் இந்த பில்லை அப்படியே மின்சார துறைக்கு அனுப்பி புகார் அளித்துள்ளார்.

அதன்பின்பே பில் தவறாக பிரிண்ட் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மின்சார கட்டணம் வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் தங்களை பயமுறுத்திய மின்சார துறையை ஒரு கை பார்க்க முடிவு செய்த மேரியின் மகன். இந்த பில்லின் புகை படத்தை அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைரலாக்கியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்