மனைவியின் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த கணவன்!

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவியின் அழுகிய சடலத்துடன் கணவர் இருந்த நிலையில் மனைவி இறந்ததே தனக்கு தெரியாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் சிகாகோ நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, ஸ்டீவன் செய்லர் (60) என்ற நபர் மனைவி தமரா வில்சனை (58) விட்டு பிரிந்திருந்த நிலையில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சில நாட்கள் இருந்த நிலையில் தமரா வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளனர், அப்போது தான் தமரா உயிரிழந்து சில நாட்கள் ஆகிய அவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த ஸ்டீவனை பொலிசார் கைது செய்தார்கள். பொலிசாரிடம் ஸ்டீவன் கூறுகையில், மனைவி இறந்தது எனக்கு தெரியவே தெரியாது, சடலத்திலிருந்து நாற்றம் வந்தும் நான் உணரவில்லை.

என் மகள் போன் செய்த போது தான் வீட்டில் மனைவி இறந்து கிடப்பதை பார்த்தேன் என கூறியுள்ளார்

பொலிசார் கூறுகையில், தமரா வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது, கதவை உடைத்து தான் உள்ளே சென்றோம்.

ஸ்டீவன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து தமராவின் ஐடி கார்டு, டெபிட் கார்டு, திருமண மோதிரத்தை கைப்பற்றினோம்.

டெபிட் கார்ட் மூலம் ஸ்டீவன் தங்க நாணயம் வாங்கிவிட்டு பின்னர் அடகு கடையில் அதை விற்றுள்ளார்.

ஏற்கனவே மனைவியை கொடுமைபடுத்தியதாக அவர் மீது கடந்த 2009-ல் வழக்கு பதியப்பட்டு $120,000 நஷ்டஈடு தமராவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், தமரா வீட்டுக்கு போக ஸ்டீவனுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி அவர் போயுள்ளதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஸ்டீவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்