இது தெய்வீக உறவு: கொரில்லாவுடன் மிக அன்பாக வாழும் பெண்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது.

பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது.

அதே நேரத்தில் குறித்த மிருகக்காட்சி சாலையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் பென்னி பேட்டர்சன் என்ற 24 வயது பெண் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

பென்னிக்கு இயல்பாகவே மிருகங்கள் மீது ஈர்ப்பு அதிகம், கொரில்லா பிறந்த செய்தியை கேட்டதும் அதை பார்க்கும் எண்ணம் அவருக்கு எழுந்தது.

ஆனால் அதை பென்னி மறந்துவிட்டார்.

ஆறு மாதங்கள் கழித்து சைக்காலஜி படித்துக் கொண்டிருந்த பென்னி அந்த ஆண்டுக்கான ப்ராஜெக்டாக மனித மிருக உரையாடல் என்ற தலைப்பை தெரிவு செய்தார்.

அப்போது ஒருநாள் பத்திரிக்கையில் தன் ஆறுமாதக் குட்டியை தன்னிடம் சேர்க்க மறுத்துவிட்டாள் ஜாக்குலின் கொரில்லா என்ற செய்தி வந்தது.

இதையடுத்து மிருகக்காட்சி சாலைக்கு சென்ற பென்னி தன் திட்டங்களை அந்த உரிமையாளரிடம் விளக்கி குட்டி கொரில்லாவை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.

கொரில்லாவுக்கு கோகோ என பெயரிடப்பட்டது.

உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும், கோகோவுக்கும் இடையில் தொடங்கியது.

நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடித்து விடலாம் என பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுடனான அவரின் உறவு தொடர்கிறது.

இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள், ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.

இது குறித்து பென்னி கூறுகையில், இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை.

எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...