பாதுகாப்புக்கு இவர்களே அச்சுறுத்தல்: அமெரிக்கா காட்டம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
113Shares

சீனா, ரஷ்யா, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தும் தீவரவாதம் ஆகியவையே தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கைகளில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு திட்ட ஆவணத்தில், "உலகளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாக நாங்கள் வரவேற்பளிப்போம். இந்தியாவுடன் பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகளை விரிவுப்படுத்த இருக்கிறோம்.

தென்சீனக் கடல் பகுதியில் சீனா அதன் ஆதிக்கத்தை அதிகரிக்கும் அதே வேளையில் தெற்காசிய நாடுகளின் இறையாண்மையைக் காக்க நாங்கள் உதவுவோம்.

தெற்காசிய பிராந்தியத்தில் பல நாடுகளின் இறையாண்மையை குறைப்பதில் சீனா ஈடுபடுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை மேற்கொள்ள நாங்கள் அழுத்தம் கொடுப்போம். தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாட்டுடன் நட்புறவை பேண முடியாது.

தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் அச்சுறுத்தலை தொடர வேண்டும் அப்போதுதான் அவர்கள் எங்களது எல்லைகளை அடைவதற்கு முன்னர் அவர்களை தடுத்து நிறுத்த முடியும்.

சீனா, ரஷ்யா, இஸ்லாம் தீவிரவாதம் ஆகியவவை எங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இருதரப்பு கூட்டுறவு உறவுகளை ஆதாரிப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்