அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன், எனக்கு உணவு, போர்வை வேண்டும் என்று கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கடிதம் எழுதியிருப்பது கண்ணீர் வரவழைத்துள்ளது.
இந்தாண்டிற்கான கிறிஸ்துமஸ் தினம் வரும் 25-ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. கிறிஸ்துமஸ் தினம் என்றாலே குழந்தைகள் மிகவும் குஷியாகிவிடுவார்கள், ஏனெனில் கிறிஸ்துமஸ் தாத்தா அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுப்பார்.
அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் 7 வயது சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம் தான் தற்போது இணையவாசிகளிடையே வைரலாக பரவி வருகிறது.
அதில் சிறுவன், எனக்கு ஒரு பந்து, உணவு, போர்வை வேண்டும், என கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதியுள்ளான், இதை அவனது வகுப்பாசிரியர் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, இது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, பொம்மைகளுக்கு பதிலாக மாணவர்கள் உணவும், போர்வையும் கேட்கும் போது, என்னுடைய இதயம் நொறுங்கிறது.
கண்டிப்பாக அவர்களின் ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.