சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட டொனால்ட் டிரம்ப்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
314Shares

அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் தனது உடல் ரீதியான அணுகுமுறையால் அதிக அளவில் சமூகவலைதளவாசிகளால் ட்ரோல் செய்யப்படுவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது.

வெள்ளை மாளிகையில் வைத்து ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்போது, டிரம்புக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது.

அப்போது, தனது முன்னால் இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்த இவர், சிறு குழந்தை போன்று அதனை தனது இரு கைகளாலும் பிடித்து குடித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, பலரும் டரம்பை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர், இவருக்கு dementia பிரச்சனை இருக்கும் என்றும் இதனால் தான் தனது கை நடுங்கவிடக்கூடாது எனபதற்காக இவ்வாறு இரண்டு கைகளை பயன்படுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் ஜனாபதி அனைவர் முன்னிலையிலும், இப்படி சிறுபிள்ளைத்தமானக நடந்துகொள்கிறார் என கிண்டல் செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப், வாட்டர் பாட்டிலை இரண்டு கைகளால் பிடித்து தண்ணீர் குடித்து கிண்டலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்