வடகொரியா ஒப்புக் கொண்டால் நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார்: அமெரிக்கா

Report Print Santhan in அமெரிக்கா

வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்கிறேன் என்று ஒப்புக் கொண்டால், அந்நாட்டுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக, டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து எல்லை மீறி ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் ஒவ்வொரு சோதனையும் உலகநாடுகளுக்கு பீதியை கிளப்பி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், வடகொரியா மக்கள் மற்றும் ஜனாதிபதி கிம் ஜாங் உன் என அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இப்படி அத்து மீறி செயல்பட்டு வரும் வடகொரியாவால் அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இருப்பினும் இதை முடிந்த அளவிற்கு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்ற வகையிலும் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டில்லர்சன், வடகொரியாவிடம் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்து, சீனாவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதற்கு வடகொரியாவுக்கு அமெரிக்க படைகளை அனுப்பினால், தென்கொரிய எல்லையில் இருக்கும் தங்களை படைகளை திருப்பி பெற்றுக் கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் வடகொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்