136 பயணிகளுடன் சென்ற விமானம்: அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டிய பெண் பயணி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் பயணி ஒருவர், புகைபிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் பயணிகளை கொலை செய்யப் போவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை ஒரேகான் மாகாணத்தின் போர்ட்லாண்டில் இருந்து கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமெண்டோவிற்கு 136 பயணிகளுடன் சவுத்வெஸ்ட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

அப்போது விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர், விமானத்தில் கழிவறையில் ரகசியமாக புகைபிடித்துள்ளார். இதை விமான ஊழியர் கண்டுபிடித்து, அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பயணி சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக ரகளையில் ஈடுபட்டதுடன், விமானத்தில் இருக்கும் பயணிக கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக விமானம் அவசரம் அவசரமாக சாக்ரமென்டோ விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அதன் பின் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது அப்பெண்ணின் பெயர் வலேரி(24) என அறிந்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்