பெண்ணின் உயிரை காப்பாற்றிய திக் திக் நிமிடங்கள்: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண்ணை காப்பாற்றிய புகைப்படம் வைரலானது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக, சுமார் 22,000க்கும் அதிகமானோர் கூடினர்.

அப்போது அங்கு வந்த ஸ்டீஃபன் பேடாக் என்பவன் கூட்டத்தினை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான்.

இந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் உயிரிழந்தனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த சம்பவத்தின்போது Mathew Cobos என்னும் ராணுவ வீரர், தனது தங்கையுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது, துப்பாக்கி சூடு நடந்தபோது கீழே விழுந்து கிடந்த பெண்ணை, மனித கேடயமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

மேலும் அருகில் இறந்து கிடந்தவர்களை அந்த பெண் பார்த்து பயந்துவிடக் கூடாது என்பதற்காக, அப்பெண்ணின் கண்களை மூடியுள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை பாதுகாப்பாக ஒரு காருக்குப் பின் மறைவாக அமர வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு உதவ சென்றுள்ளார்.

Mathewவின் இந்த செயலை அங்கிருந்த டேவிட் பெக்கர் என்னும் புகைப்படக் கலைஞர் படமெடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது, கலிபோர்னியாவைச் சேர்ந்த Mathew, ஹவாய் மாகாணத்தில் அமெரிக்க ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்