சிறையில் வைத்து கர்ப்பிணி பெண்ணை மோசமாக தாக்கிய பொலிசார்: கலைந்த கரு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பெண்மணியை பொலிசார் சிறையில் வைத்து தாக்கியதில் அவரது கரு கலைந்துள்ளது.

Martini Smith என்பவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், 2009 ஆம் ஆண்டு எனக்கு 20 வயது இருக்கும்போது எனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது என்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அவனை கத்தியால் குத்தினேன்.

இதனால் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட் ஒகியோ மாகாண சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது இவர் கர்ப்பமாக இருந்தேன்.

வீடியோவை காண

இந்நிலையில் விசாரணைக்காக என்னை அழைத்துசென்ற பொலிசார், எனது உடலில் அணிந்திருந்த அணிகலன்களை கழற்றும்படி வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக எனது தனது நாக்கில் தோடு அணிந்திருந்தேன், அதனை கழற்றியே ஆகவேண்டும் என அடித்து என் மீது தண்ணீரை பாய்ச்சியுள்ளனர்.

என்னை பொலிசார் மோசமாக தாக்கியதில் 5 நாட்கள் கழித்து எனது கரு கலைந்துவிட்டது, நான் மட்டுமல்லாது அந்த நாளில் என்னைப்போன்று 9 பேர் பொலிசார் கொடுமையாக தாக்கப்பட்டனர் என கூறியுள்ளார்.

விசாரணையின்போது பொலிசார் கைதிகளை சித்ரவதை செய்து வீடியோக்கள் வெளியாகியுள்ளது, 2000 ஆம் ஆண்டு முதல் ஒகியோ சிறைச்சாலையில் 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, இந்த வீடியோவால் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய ஐ.நா. முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா சிறப்புப் பிரதிநிதி Nils Melze கூறியதாவது, கைதிகளின் வேதனையும், அவர்கள் அனுபவிக்கும் வலிகள் இந்த வீடியோவின் மூலம் தெரியவருகிறது.

அமெரிக்காவில் உள்ள 4 முக்கிய சிறைச்சாலைகளில் இதுபோன்ற சித்ரவதைகள் நடக்கிறது.

Franklin County, Ohio; Cheatham County, Tennessee; Franklin County, Arkansas; and McCurtain County, Oklahoma மேற்கூறிய நான்கு சிறைச்சாலைகளில் நடக்கும் சித்ரவதைகள் குறித்து விசாரணை நடத்த Nils Melze உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்