8 மாதங்களாக விமான நிலையத்தில் இறந்து கிடந்த நபர்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நபர் ஒருவர் கடந்த 8 மாதங்களாக பிணமாக கிடந்துள்ளார்.

Randy Potter (53) என்ற நபர் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 17 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

அன்று சென்ற இவர் 8 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை, இந்நிலையில் இவர உடல் Kansas விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் டிரக் வண்டிகளுக்கு இடையில் கடந்த செப்டர்பர் 19 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் துர்நாற்றம் வந்ததையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது, இவர் தற்கொலை செய்து இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால், இதனை மறுத்துள்ள Randy யின் மனைவி, இது எப்படி சாத்தியமாகும், 8 மாதங்களாக விமான நிலையத்தில் டிரக் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதா? இதனை எந்த அதிகாரிகளும் கவனிக்கவில்லையா? 8 மாதங்களாக எனது கணவரின் உடல் எப்படி அங்கு இருந்திருக்கும் என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Kansas நகர வழக்கறிஞர் ஜான் பிக்கர்னோ கூறியதாவது, என்ன நடந்தது, எதற்காக நடந்தது என்பதை கண்டுபிடிப்பது தான் எங்கள் குறிக்கோள், இதுபோன்ற யாருக்கும் மறுபடியும் நடக்ககூடாது என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Kansas நகரம் மற்றும் அதன் விமானதுறைத் (Aviation Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், Randy Potter குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவர்களை சமாதானப்படுத்த விரும்புகிறோம்.

Kansas நகர சர்வதேச விமான நிலையத்தில் 25,000 வாகனம் நிறுத்தும் இடங்களை நிர்வகிக்றோம், நடந்தவை குறித்து நாங்கள் விசாரிக்கிறோம் என கூறியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்