100 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு..கம்யூட்டரில் இருந்த 37,000 ஆபாச வீடியோ: சிக்கிய மருத்துவர்

Report Print Santhan in அமெரிக்கா
134Shares

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக செயல்பட்டு வந்தவர் லேரி நாகர்(54). மிச்சிகன் மாநில யுனிவர்சிட்டியில் வேலை பார்த்து வந்த இவர், 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் பின் இந்த வழக்கின் காரணமாக அவரது கம்ப்யூட்டர் Hard Disk-ஐ ஆராய்ந்து பார்த்த போது குழந்தைகள் தொடர்பான 37,000 ஆபாச கிராபிக்ஸ் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஓப்புக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு 60 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் இவர் மீது செக்ஸ் புகார் கூறியுள்ளார், அந்த வழக்கின் தீர்ப்பும் விரைவில் தெரிவிக்க உள்ளதால், அதில் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்க் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்