முயலை காப்பாற்றுவதற்கு கடுமையாக போராடிய நபர்: உலகம் முழுவதும் வைரலான சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா
167Shares

கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் இடத்தின் வழியே வாகனத்தில் சென்ற ஒருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு முயலை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ கடுமையாக பரவி வருகிறது. வனப் பகுதிகளில் பரவியிருந்த காட்டுத் தீ அதன் பின் அங்கிருக்கும் வீடுகளில் பரவ துவங்கியுள்ளது.

இதன் காரணமாக வென்டுரா, சாண்டா பவுலா ஆகிய நகரங்களில் வசித்த சுமார் 20,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். சுமார் 26,000 ஏக்கர் பரப்புக்கு மேல் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காட்டுத் தீ பரவி வரும் வழியே சென்ற நபர் ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென்று காரை நிறுத்திவிட்டு வேகமாக ஓடிய அவர், அங்கிருந்த முயலை பார்த்து கத்திக் கொண்டே குதித்தார்.

ஏனெனில் அந்த முயலானது, தீ பரவும் இடத்திற்குள் நுழைந்தது. இதனால் மிகவும் குழம்பி போன இவர், முயலுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று அங்கு புலம்பிய படி இருந்தார்.

அதன் பின் அவர் கண்ணில் அந்த முயல் தென்பட்டது. உடனடியாக முயலை பிடித்த அவர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், முயலை காப்பாற்றிய குறித்த நபர் உலகில் உள்ள பலரின் இதயங்களில் இடம்பிடித்துள்ளதுடன், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்