கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

Report Print Kabilan in அமெரிக்கா
17Shares

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. வனப்பகுதியில் பரவத் தொடங்கிய இந்த காட்டுத் தீ, நேற்று இரவு முதல் வீடுகளிலும் பரவியுள்ளது.

இதன் காரணமாக வெண்டுரா, சாண்டா பவுலா ஆகிய நகரங்களில் வசித்த, சுமார் 20,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், சுமார் 26,000 ஏக்கர் பரப்புக்கு மேல் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வேகமாக பரவி வரும் காட்டுத் தீயின் காரணமாக, கலிபோர்னியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்