100 சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த மருத்துவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Raju Raju in அமெரிக்கா
540Shares

அமெரிக்காவில் உடல் பரிசோதனைக்காக வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த மருத்துவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் லார்ரி நாசர் (54), இவர் நாட்டின் ஜிம்னாஸ்டிக் கழகத்தில் மருத்துவராக பணிபுரிந்தார்.

அப்போது பரிசோதனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அவர்களை நிர்வாண படம் எடுத்து சித்ரவதை செய்ததாக நாசர் மீது புகார்கள் எழுந்தன.

இதையடுத்து நாசர் மீது மிச்சிகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நாசருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சிறுமிகளை நிர்வாண படம் எடுத்தது தொடர்பான மூன்று வழக்குகளில் தலா 20 ஆண்டுகள் வீதம் தண்டனை பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையில் நாசர் மீது பாலியல் சித்ரவதை தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வரும் நிலையில் அதற்கான தீர்ப்பு வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்