அணிலை கைது செய்த பொலிசார்: விசித்தர காரணம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மரத்தை கடித்து சேதப்படுத்தியதாகக் கூறி அணில் ஒன்றை பொலிசார் கைது செய்த விசித்தர சம்பவம் நடந்துள்ளது.

நியூஜெர்சியை அடுத்த சீ கிர்ட் நகரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

இங்குள்ள ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணில் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.

இதையடுத்து அணில் மீது குற்ற வழக்குப்பதிவு செய்த பொலிசார் அதை கைது செய்தார்கள்.

பின்னர் அணிலை பெயிலில் பொலிசார் விடுவித்தார்கள். இந்த தகவலை பொலிசார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers