இளம் பெண் செய்த செயலால் வீடில்லாதவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனக்கு உதவி செய்த வீடு இல்லாதவருக்கு லட்சக்கணக்கில் நிதி திரட்டி உதவி செய்துள்ளார்.

கேதே மெக்லேர் அமெரிக்காவைச் சேர்ந்த இப்பெண் காரில் பிலடெல்பியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இவரது கார் பாதிவழியிலே எரிவாயு இல்லாமல் நின்றுள்ளது.

அதுமட்டுமின்றி கையில் பணமும் இல்லாமல் தவித்துள்ளார். அப்போது வீடின்றி சாலையோரம் வசித்த பாபிட் என்பவர் தன்னிடம் இருந்த கடைசி பணமான 20 டொலருக்கு ஒரு கேனில் வாகன எரிவாயுவை வாங்கி அவரை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த கேதே மெக்லேர், பாபிட்டுக்கு வீடு மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க நிதி திரட்டி உதவி செய்ய இணைய தளத்தில் வெளியிட்டு நிதியுதவி கோரியுள்ளார்.

அவர் 10 ஆயிரம் டொலர் நிதி திரட்ட இலக்கு நிர்ணையித்திருந்த நிலையில் 2 லட்சத்து 52 ஆயிரம் டொலர் நிதி கிடைத்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்