அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமிக்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து மிக அருகாமையில் இருக்கும் குறித்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலை தாக்குவதற்கான சாத்தியம் மிக அதிகம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களால் குறிப்பிடும் பகுதியானது 200 முதல் 530 ஆண்டுகளுக்கு ஒருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும், கடந்த 1700 ஆம் ஆண்டு இப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும் எப்போது நிலநடுக்கம் தாக்கும் என்ற குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்ட முடியாது எனவும், ஆனால் வரலாற்றில் பொறிக்கப்படும் அளவுக்கு இந்த நிலநடுக்கம் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்