காதலர் தேவை என குறிப்பெழுதி கடலில் வீசிய இளம்பெண்: கிடைத்த விசித்திரமான பதில்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் காதலர் தேவை என ரப்பர் பந்தில் குறிப்பு ஒன்றை எழுதி கடலில் வீசிய இளம்பெண்ணிற்கு விசித்திரமான பதில் கிட்டியுள்ளது.

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள Hayley Robbins(18) வயது இளம்பெண் ஒருவர் கடற்கரைக்கு சென்ற ஒரு நாள் விளையாட்டாக ரப்பர் பந்து ஒன்றில் காதலர் தேவை என தமது மொபைல் எண்ணுடன் பெயரையும் குறிப்பிட்டு கடலில் வீசியுள்ளார்.

இச்சம்பவம் நடந்து நீண்ட 6 வருடங்கள் கடந்த நிலையில் திடீரென்று Hayley Robbins மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், நான் உங்களது சூப்பர் ஹீரோவாக ஆசைப்படுகிறேன், எனது பெயரை தெரிந்து கொள்ள முயலுங்கள் என குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி தங்கள் பெயரை தெரிந்து கொண்டனர். தகவல் அனுப்பிய நபர் தமது பெயர் ஆதம் எனவும், கடற்கரையில் ஒதுங்கிய ரப்பர் பந்தில் இருந்த தகவல் தம்மை கவர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இருவரும் நெருக்கமான சில நாட்களிலேயே, தமக்கு தகவல் அனுப்பிய ஆதம், 16 வயதேயான இளம்பெண் எனவும், அவரது உண்மையான பெயர் கெல்ஸி எனவும் தெரிய வந்தது.

இது ஹேலி ராபின்சுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும், தனது மனதை தேற்றிக்கொண்ட ஹேலி தற்போது அந்த இளம்பெண்ணுடன் தோழமையில் இருந்து வருகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்