அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 40 குடும்பங்களின் நிலை என்ன?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதை அணைப்பதற்கு 170 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்காவில் இன்று உள்ளூர் நேரப்படி பகல் 3 மணி அளவில் நியூயார்க்கின் Hamilton Heights-இல் இருக்கும் 6 அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல எரிந்து வருவதால் உள்ளே இருப்பவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை, மேலும் தீ பற்றும் முன்பு உள்ளே இருந்தவர்கள் எத்தனை பேர், தற்போது எத்தனை பேர் வெளியேறியுள்ளனர் என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்த சம்பவம் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்துள்ளனர். 177 தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவிக்கையில், அந்த கட்டிடத்தில் 40 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதில் உள்ள 6 அடுக்குமாடிகளில் முதல் மாடியில் கடைகள் இருப்பதாகவும், மற்ற 6 மாடிகளிலும் மக்கள் வசித்து வந்தாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தீவிபத்தால், உள்ளே இருந்த பலர் வெளியில் வந்துள்ளதாகவும், தற்போது வரை யாருக்கும் எந்த ஒரு காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது, இருப்பினும் முழு தகவல் வந்த பின்னரே உறுதியான தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...