சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமியின் வளர்ப்பு தாய் கைது

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமியின் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த வெஸ்ஸி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி சினி மற்றும் மகள்கள் ஷெரின் மற்றும் மகள் மேத்யூஸ் ஆகியோருடன் அமெரிக்காவின் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வந்துள்ளார்.

இதில், ஷெரின் அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி தனது மகளை காணவில்லை என வெஸ்ஸி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை தேடியபோது, மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து 27-ம் திகதி ஒரு சிறுமியின் சடலத்தை பொலிசார் கண்டெடுத்தனர்.

இதுகுறித்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த சடலம் காணாமல் போன இந்திய சிறுமியின் உடல் என பொலிசார் உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தை இரவு பால் குடிக்கும்போது அடைப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் அவள் இறந்துவிட்டாள் என நினைத்து மறைத்து வைத்தேன் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து அக்குழந்தையின் வளர்ப்பு தந்தையையும், சிறுமியை ஆபத்தான நிலையில் தனியாக விட்டுச்சென்ற தாயையையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...