அமெரிக்காவில் இந்திய மாணவர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தரம்பிரித் சிங் ஜாஸர்(வயது 21), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கல்லூரி படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக தெரிகின்றது.

இதற்கிடையே நேற்று(16-11-2017) அந்த அங்காடியில் பயங்கர ஆயுதங்களுடன் நான்கு பேர் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.

இவர்களை பார்த்த ஜாஸர் உயிருக்கு பயந்து அடியில் ஒளிந்து கொண்டதாக தெரிகிறது, கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தவர்கள் ஜாஸரை பார்த்து விட்டனர்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவர் ஜாஸரை நோக்கி சரமாரியாக சுட, சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் பலியானார்.

இதனைதொடர்ந்து அங்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜாஸரை பார்த்து பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் ஜாஸரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, கொள்ளையர்களின் கும்பலில் அத்வால் என்ற நபர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அவரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் ‘அதிர்ச்சியூட்டும் இந்த கொலை சம்பவம் குறித்து அமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து மாணவரின் குடும்பத்துக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சுஷ்மா, அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவம், இறந்த மாணவனின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...