அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தியவன்: மனைவியை முன்னதாக கொன்றது அம்பலம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன், அதற்கு முன்னதாக தனது மனைவியை கொன்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய் கிழமை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவனின் பெயர் நியல் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவன் பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அதாவது திங்கட்கிழமை இரவே தனது மனைவியையும் சுட்டுக் கொன்றது தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்