பள்ளி மாணவனுடன் ஆசிரியைக்கு தகாத உறவு: நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in அமெரிக்கா

பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த இளம் ஆசிரியையை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு Katherine Ridenhour (23) என்ற பெண் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் பயிலும் 17 வயதான மாணவனுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது வெளியில் தெரிந்த நிலையில் பொலிசார் Katherine-ஐ கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொலிசார் கூறுகையில், உயர் பொறுப்பில் இருந்து கொண்டு மாணவனிடம் Katherine இப்படி நடந்து கொண்டதற்காக அவர் மீது கிரிமினல் குற்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட Katherine தனது பணியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stacey Krok என்பவர் கூறுகையில், பள்ளியின் உள்ளே என்ன நடக்கிறது என பல சந்தேக கேள்விகள் எழுகிறது.

இது ஒரு சங்கடமான விடயம், ஒரு ஆசிரியை சிறிதேனும் தொழில்முறையோடு நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers