ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததா அமெரிக்கா? ரஷ்யாவின் உண்மை முகம் அம்பலம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
508Shares
508Shares
lankasrimarket.com

சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்ற பெயரில் அமெரிக்க இராணுவத்தினர் சில குற்றங்களை புரிந்து வருவதாக ரஷ்யா புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் சிரியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு இராணுவத்திற்கு இராணுவ உதவி செய்து வருகின்றன.

இதில், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய மொகசூல் நகரை மீட்டெடுக்க உதவியது.

இந்நிலையில், அமெரிக்க இராணுவம் ஐஸ் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஈராக் இராணுவப்படையினர் ஐஎஸ் தீவிரவாதிகளை தாக்கும் காட்சி என்று இரண்டு புகைப்படத்தினை வெளியிட்டனர்.

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து, வேறு புகைப்படத்தை வெளியிட்டு சிரிய படையினர் தாக்குதல் நடத்தும்போது, ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடுவதற்கு அமெரிக்க இராணுவம் உதவி செய்கிறது என தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சிரிய இராணுவத்துடன் சேர்ந்து அபு கமால் நகரத்தை மீட்பதற்கு அமெரிக்க தலைமையிலான கூட்டணி ஒத்துழைக்க மறுத்துவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ள ரஷ்யா, இவ்வாறு செய்வதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களை ஊக்குவித்து அதனை தங்கள் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அமரிக்கா முயற்சி செய்கிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டினை அமெரிக்கா மறுத்துள்ளது. விளையாட்டு இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனலின் ஒரு விளம்பர வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ கேமின் புகைப்படங்களை இதில் ரஷ்யா பதிவேற்றம் செய்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அவர்கள் செய்த இந்த மோசடி வெளியில் தெரியவந்தால் ரஷ்யா கூறிய பொய்யை முற்றிலும் அறிய வேண்டி வரும் என்று அமெரிக்க தலைமையிலான இராணுவ அதிகாரி Col Ryan Dillon கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்