6 வயது சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம்:மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
185Shares
185Shares
ibctamil.com

அமெரிக்காவில் 6 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் பொலிசிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 6 வயது சிறுவனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்காக அவனது பெற்றோர் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

அது Collaguazo(44) என்பவருக்கு சொந்தமான குடியிருப்பின் ஒரு பகுதியாகும். சம்பவத்தன்று விழாவின் ஒருபகுதியாக பிறந்த நாள் கொண்டாடும் சிறுவனும், அவனது நண்பர்கள் சிலரும் Collaguazo அழைப்பின் பேரில் அவரது அறையில் சென்று திரைப்படம் ஒன்றை கண்டு களித்துள்ளனர்.

அப்போது சிறுவர்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி திடீரென்று வெளியேறியுள்ளார்.

சிறுமியுடன் விசாரித்ததில் குறித்த நபர் வலுக்கட்டாயமாக சிறுமியை முத்தமிட்டுள்ளார். இதில் பயந்துபோன சிறுமி அந்த அறையில் இருந்து வெளியேறியுள்ளார். மட்டுமின்றி நடந்தவற்றை வெளியில் சொல்லக் கூடாது எனவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த சிறுமியின் தாயார் குறித்த அறையில் சென்று பார்வையிட்டபோது, பிறந்த நாள் கொண்டாடும் சிறுவனை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக வெளியேறிய சிறுமியின் தாயார் நடந்தவற்றை சிறுவனின் தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்த நபரை தாக்கிய சிறுவர்களின் பெற்றோர், பின்னர் அறையை பூட்டி வைத்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே அறையை திறந்து பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி மிஞ்சியது. அந்த நபர் அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பித்து சென்றுள்ளார்.

ஜன்னல் வழியாக பார்த்த அவர்கள் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த நபர் அங்கிருந்து தப்பிக்கும் அவசரத்தில் குதித்ததில் கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

அதே வேலை பொலிசாரும் குறித்த குடியிருப்பில் வந்து சேர்ந்துள்ளனர். பின்னர் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பல்னின்றி குறித்த நபர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்