சவுதி அரேபியா- ஈரானுக்கு இடையே மறைமுக போர்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Report Print Santhan in அமெரிக்கா

சவுதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையேயான மறைமுக போருக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஜனாதிபதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி படைக்கு ஈரானும் ஆதரவளித்து வருகிறது. ஹவுத்தி படையை குறிவைத்து சவுதி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது, இதையடுத்து லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, சமீபத்தில் சவுதி அரேபியா சென்றார். அங்கிருந்தபடியே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன் என்று அறிவித்தார்.

ஆனால் அதை லெபனான் ஜனாதிபதி மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஹரிரியை விடுவிக்க உத்தரவாதம் கிடைத்து உள்ளது. லெபனான் மாநிலத்தின் சட்டபூர்வமான பாதுகாப்புப் படைகளைத் தவிர வேறு போராளிகள் அல்லது ஆயுதக் குழுக்கள் எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் சட்டபூர்வமான இடம் அல்லது பங்கு இல்லை.

லெபனான் குடியரசின் மற்றும் அதன் அரசியல் நிறுவனங்களின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று கூறியுள்ளார்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers