உயிருக்கு போராடும் சிறுவனுக்காக பெற்றோர் செய்த செயல்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்காக பெற்றோர் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னரே கொண்டாடி மகிழ்வித்துள்ளனர்.

சிறுவர்களை தாக்கும் ஒருவகை புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் 9 வயதான லிட்டில் ஜேக்கப் தாம்சன்.

கடந்த மாதம் அமெரிக்காவின் Maine பகுதியில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவன் லிட்டில் ஜேக்கப் தாம்சன் இனி சில வாரங்களே உயிர் வாழ்வான் என்ற தகவலை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுவனை மகிழ்விக்க அவரது பெற்றோர் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னரே கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி பேஸ்புக் பக்கத்தில் சிறுவனின் இதுவரையான போராட்டங்களை பதிவிட்டு, வாழ்த்து அட்டைகளை அனுப்ப கேட்டுக் கொண்டனர்.

வியப்பளிக்கும் வகையில் பேஸ்புக் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே சிறுவனுக்கு சாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மட்டுமின்றி பிரபல நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் சிறப்பு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகெங்கிலும் இருந்து சிறுவனை வாழ்த்தி இதுவரை 66,000 வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாழ்த்து அட்டைகள் அனைத்தையும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையின் சுவற்றில் பதித்து வைத்துள்ளனர்.

இந்த வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு என இருதினங்களில் சிறுவன் லிட்டில் ஜேக்கப் தாம்சன் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தனது கடைசி கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாட இருக்கிறான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்