அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு: குழந்தைகளை கட்டி அணைத்து குண்டுகளை உடலில் வாங்கிகொண்ட பெண்

Report Print Santhan in அமெரிக்கா
521Shares

அமெரிக்காவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாயார் ஒருவர் தனது நான்கு குழந்தைகளை கட்டி அணைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகளை தன்னுடைய உடலில் வாங்கிக் கொண்டு இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் விமானப்படை வீரரான டெவின் பேட்ரிக் கெல்லி(26) என்ற நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 26 பேர் பலியாகினார்.

தாக்குதல் நடத்திய நபர் அவரது வாகனத்திலே மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, தாயார் ஒருவர் தனது உயிரை கொடுத்து நான்கு குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், ஜோன் வார்ட் என்ற பெண் தனது நான்கு குழந்தைகளுடன் குறித்த தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், அவர் உடனடியாக ஓடிச் சென்று தனது நான்கு குழந்தைகளையும் கட்டி அணைத்தபடி பாதுகாப்பு கவசம் போல் இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கீழே விழுந்த அவரின் உடலில் 10-க்கும் மேற்பட்ட குண்டுகள் துளைத்ததால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் நன்கு போரையும் கீழே படுக்க வைத்துவிட்டு அவர்கள் மேல் இவர் படுத்து இருந்தார் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்