அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தென் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள தெற்கு கரோலினா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பிரபல பல்கலைக்கழகத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்த பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த நபர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், காக்கி நிற கால்சட்டையும், சாம்பல் நிற மேல்சட்டையும் அணிந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைகழகம் சிறிது நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து மாயமானதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிறன்று டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்து மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.