டிரம்ப் வாகனத்தை நோக்கி ஆபாச சைகை: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in அமெரிக்கா
516Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜூலி பிரிஸ்க்மேன் என்ற பெண் தான் இதை செய்துள்ளார். அவர் சைகை செய்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானதால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளத்திடம் பேசிய ஜூலி, எனது நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த புகைப்படத்தை ஆபாசம் அல்லது கீழ்த்தரமானது என்று தரம் பிரித்தார்கள்.

அதை நான் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டதன் மூலம் அலுவலகத்தின் சமூக வலைதள கொள்கையை மீறி விட்டதாக கூறி என்னை பணிநீக்கம் செய்துவிட்டார்கள்.

இருந்தபோதும், குறித்த புகைப்படம் எடுக்கப்படும்போது நான் அலுவலக வேலை நேரத்தில் இல்லை. பதிவுகளில் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை.

தற்போது வேலை பறிபோனதால் தனது செயலுக்கு வருந்தவில்லை எனவும், முன்பை விடவும் தற்போதே நான் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்