அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் முகத்தை போன்ற சாயலில் நாய் ஒன்றின் காதின் உட்பகுதி இருப்பது தற்போது பரபரப்பாகியுள்ளது.
ஜேட் ராபின்சன் என்பவரது ஜேர்ரோ எனும் வகையை சேர்ந்த நாயின் காதின் உட்பகுதி தான் டிரம்ப்பின் முகம் போன்ற அமைப்பில் உள்ளது.
இதனால் தனது நாயின் காது குறித்து ஆய்வு செய்வதற்காக 430 யூரோக்களை நிதியாக கோரியுள்ளார் அதன் உரிமையாளர்.
ஜேட் ராபின்சன் தனது நாய் தூங்கும்போது அதன் காதினை புகைப்படம் எடுத்து தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்த அவரது நண்பர், நாயின் காதின் உட்பகுதியும், டொனால்டு டிரம்ப்பின் முகமும் ஒத்திருப்பதை கண்டறிந்து ராபின்சனிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாயின் உரிமையாளரான அவர், தனது நாய் மிகவும் சுறுசுறுப்பான, குறும்புத்தனம் நிறைந்த செல்லப்பிராணியாகும். அதன் காதின் உட்பகுதி அமெரிக்க அதிபரின் முகம் போல உள்ளதால், அது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அனைவரும் இதற்கு உதவ வேண்டும் என தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.