கிளாரிக்கு தான் நான் ஓட்டு போட்டேன்..டிரம்ப் ஒரு வெற்றுத்தனமானவர்: புஷ் கோபம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ், தான் கிளாரி கிளிண்டனுக்குத் தான் ஓட்டுப் போட்டதாகவும், டிரம்ப் ஒரு வெற்றுத்தனமானவர் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாரும் எதிர்பார்க்காக வகையில் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ், தற்போதைய ஜனாதிபதியான டிரம்பை வெற்றுத்தனமானவர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில், டிரம்பை தனக்கு பிடிக்கவில்லை என்றும், அவரைப்பற்றி தனக்கு முழுமையாக தெரியாது, அவர் தலைவராக இருப்பதில் தனக்கு எந்த ஒரு உற்சாகமும் இல்லை எனவும் சொல்லப்போனால் அவர் ஒரு வெற்றுத்தனமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளாரி கிளிண்டனுக்கு ஓட்ட போட்டதை உறுதிப்படுத்திய அவர், நான் என்ற அகங்காரம் கொண்டிருந்ததன் காரணமாகவே டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்