கிறிஸ்துமஸை இப்போதே கொண்டாடும் சிறுவன்: நெஞ்சை உருக்கும் காரணம்

Report Print Raju Raju in அமெரிக்கா

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் கிறிஸ்துமஸ் தினத்தன்று உயிரோடு இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறியுள்ளதால் அதற்கு முன்னரே பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறான்.

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரை சேர்ந்தவர் மிச்சேல்லே தாம்சன், இவரின் மகன் ஜேக்கப் தாம்சன் (9)

ஜேக்கபுக்கு ஐந்து வயதிலேயே நரம்பு செல்களில் உருவாகும் neuroblastoma புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட போதும், நோய் முற்றியுள்ளதால் டிசம்பர் 25-ல் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்னரே ஜேக்கப் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்போதும் விரும்பி கொண்டாடும் ஜேக்கப் இந்த வருட பண்டிகையை பார்க்க முடியாமல் போகலாம் என்பதால் அவன் குடும்பத்தார் முன்கூட்டியே பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் ஜேக்கப் இருக்கும் நிலையில் அவன் இருக்கும் அறையில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார்கள், மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளது.

கிறிஸ்துமஸ் தாத்தாவும் அங்கு வரவுள்ளார்.

ஜேக்கப்பிற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை மிகவும் பிடிக்கும் என்பதால் அதை அவனுக்கு எல்லோரும் அனுப்ப வேண்டும் என மிச்சேல்லே பேஸ்புக்கில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி பலரும் வாழ்த்து அட்டைகளை ஜேக்கப்புக்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்