நன்றி தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகர்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

ஹாலிவுட்டின் இளம் நடிகர் Brad Bufanda தனது வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறு வயதிலேயே திரையுலகில் கால்பாதித்த இவர், Veronica Mars என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார்.

கூடைப்பந்தாட்ட விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு அந்த துறையில் கால்பதிக்க வாய்ப்புகள் வந்தபோதும், நடிப்பு துறையை தெரிவு செய்தார்.

இந்நிலையில், எனது வாழ்வில் என்னுடன் இதுவரை இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி என கடிதம் எழுதிவைத்து தனது வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான காரணம் தெரியவரவில்லை , அதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்